இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

முதியவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட போது , கடுமையான வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிட்டார்.

அதேவேளை கடந்த வியாழக்கிழமை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 44 வயதுடைய நபர் ஒருவரும் கடும் வெப்ப தாக்கத்தால் உயிரிழந்திருந்தார்.

அத்துடன், அண்மைய நாட்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் “ஹீட் ஸ்ரோக்” ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ரி .பேரானந்தராஜா  ஊடக சந்திப்பில் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை