அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்து எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லலையென ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அரசு ஊடகமான IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவடைந்த நிலையில்,
தற்போதைய நிலவரங்கள் குறித்து மட்டுமே இந்த தகவல்கள் பரிமாறப்பட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே இந்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





