இங்கிலாந்தில் நீர் விநியோகத் தடை -வாடிக்கையாளர்களை கைவிட்டதை ஒப்புக்கொண்ட தலைவர்
இங்கிலாந்தில் குளிர்காலத்தில் ஏற்பட்ட கடுமையான நீர் விநியோகத் தடைகளுக்கு பிறகு,
வாடிக்கையாளர்களை நிறுவனம் கைவிட்டதாக நீர் நிறுவன தலைவர் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கென்ட் மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 24,000 வீடுகள் நீர் தடை அல்லது குறைந்த அழுத்த பிரச்சனைகளை எதிர்கொண்டன.
பின்னர் மேலும் 30,000 வீடுகள் இதேபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் குழு முன்னிலையில் விசாரிக்கப்பட்ட போது, சவுத் ஈஸ்ட் நீர் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ் ட்ரெய்ன், நிறுவனம் தனது அடிப்படை கடமையில் தோல்வியடைந்துள்ளதாகவும், மக்களுக்கு நீர் வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.
நீர் இன்றி மக்கள் மக்கள் சிரமப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விநியோகத் தடைகளால் பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
வணிக நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க £600,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அது போதுமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
இதனிடையே, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மீது பதவி விலகும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால், நிறுவன வாரியம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.





