உலகம்

நிபா வைரஸ் தொற்று : ஆசிய நாடுகளில் பயண பரிசோதனை தீவிரம்!

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து, நேபாளம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் சுகாதார கண்காணிப்பு மற்றும் பயண பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.

மேற்கு வங்காளத்தில் இருந்து வரும் பயணிகளை தாய்லாந்து அதிகாரிகள் முக்கிய விமான நிலையங்களில் பரிசோதித்தப்பின் நாட்டிற்குள் அனுமதிப்பதாக கூறப்படுகிறது.

நேபாளம் அதன் சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவுடனான நில எல்லைகளில் சுகாதார மையங்களை அமைத்துள்ளது.

தைவான் நிபா வைரஸை 5 ஆம் வகை அறிவிக்கத்தக்க நோயாக வகைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம்  தொற்று குறித்த  அறிக்கையிடல் மற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கட்டாயப்படுத்த முடியும்.

நிபா வைரஸ் என்பது முதன்மையாக பாதிக்கப்பட்ட பன்றிகள் மற்றும் வௌவால்களிடமிருந்து பரவும் ஒரு ஜூனோடிக் (zoonotic) நோயாகும்.  நபருக்கு நபர் தொடர்பு மூலமாகவும் பரவக்கூடும் என்பதுடன் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் வரை இருக்கும்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்