ஹார்முஸ் நீரிணையில் ‘புதிய அத்தியாயம்’ உருவாகிறது – ஈரான் உச்ச தலைவர் கருத்து
அமெரிக்காவின் தோல்விக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் புதிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அத்தியாயம் உருவாகி வருவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அரச செய்தி நிறுவனம் IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
“இன்று, இப்பகுதியில் உலகின் மிகப்பெரிய பிரசாரம் மற்றும் ஆக்கிரமிப்பு நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அமெரிக்கா தனது திட்டத்தில் வெட்கக்கேடான தோல்வியை சந்தித்த பின்னரும், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகிறது என தெரிவித்துள்ளார்.
1622 ஆம் ஆண்டு ஹார்முஸ் நீரிணையிலிருந்து போர்த்துகீசியப் படைகள் வெளியேற்றப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.




