இலங்கை

கணிதபிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் முதலிடம் பெற்றுள்ளார்.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் விஜிதரன் ஜதிவர்மன் 2ஏ, பி சித்திகளை பெற்று கணித பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் கணித துறையில் மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 1473 ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது விருப்பப்படி கணித பிரிவில் கல்வி கற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளதாகவும் இந்த நிலையை அடைய வழிகாட்டிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் என ஜதிவர்மன் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்