இலங்கை

பாகிஸ்தான் மற்றும் ஈரானிய பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம்

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இலங்கைக் கடற்பரப்பிற்குள் 123 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், குற்றவாளிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு, தண்டனையை அனுபவிக்கும் வகையில் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்