விஜயின் லைஃப் டைம் வசூலை இன்று தவிடுபொடியாக்கும் லியோ
![](https://iftamil.com/wp-content/uploads/2023/09/leo-new-poster21-jpg.webp)
லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது.
இப்படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் முதல் பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் இருப்பதாக விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர்.
இருப்பினும் பேமிலி ஆடியன்ஸுக்கு லியோ படம் மிகவும் பிடித்துப்போனதால், இப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதன்படி இப்படம் நேற்று மட்டும் உலகளவில் ரூ.90 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் மூன்றே நாளில் உலகளவில் ரூ.300 கோடி வசூலைக் கடந்து மாஸ் காட்டி உள்ளது லியோ.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு படம் ரூ.310 கோடி வசூலித்ததே விஜய்யின் கெரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக இருந்து வந்த நிலையில், லியோ திரைப்படம் மூன்றே நாளில் அந்த வசூலை நெருங்கி உள்ளது.
இன்று வாரிசு படத்தின் லைஃப் டைம் வசூலை லியோ முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.