இலங்கை

இலங்கையின் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை  மற்றும் காலி ஆகிய 05 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழைவீழ்ச்சியானது 100 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளதாகவும், இதன்காரணமாக மண்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மண்சரிவு ஏற்படுவது தொடர்பிலான அறிகுறிகள் குறித்தும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்