ஐரோப்பா செய்தி

காங்கிரஸில் உரையாற்றி புதிய வரலாறு படைக்கிறார் மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump)  இடையிலான இருதரப்பு சந்திப்புக்கு முன்பு, அரச குடும்பத்தினர் வெள்ளை மாளிகையில்  நடைபெறும் இராணுவ வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

அதன்பின், காங்கிரஸில் உரையாற்றும் இரண்டாவது பிரித்தானிய மன்னர் என்ற

வரலாற்றுச் சாதனையை மன்னர் சார்லஸ் படைக்க உள்ளார். இதற்கு முன், அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி  1991ஆம் ஆண்டு அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றியிருந்தார்.

ரான் போர் சூழ்நிலை காரணமாக இரு நாடுகளின் உறவுகள் பதற்றமாக இருக்கும் நேரத்தில்  இந்தப் பயணம் இடம்பெற்றள்ளது. இந்த விஜயம், டிரம்ப் மற்றும் பிரித்தானியபிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)

இடையிலான உறவை மேம்படுத்த உதவும் என வொஷிங்டன் நம்புகிறது.

மேலும், வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தின்போது வொஷிங்டன் டி.சி.யில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மன்னர் அனுதாபம் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று, மன்னர் மற்றும் ராணி கமிலாவை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி வரவேற்றார்.

மன்னர் சார்லஸ் (Charles) மற்றும் ராணி கமிலா ( Camilla) மேற்கொண்டுள்ள நான்கு நாள் அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் இரண்டாவது நாள் இன்று நடைபெறுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!