இலங்கை

யாழ் – நெடுந்தீவில் தனிமையில் இருந்த இளைஞன் சடலமாக மீட்பு !

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் உறவினர்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் அவர்களின் வீட்டினை இளைஞனே பராமரித்து வருவதுடன் , வீட்டின் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் தங்கியும் இருந்துள்ளார்.

குறித்த இளைஞனின் வீடு அருகில் உள்ளதால், தனது வீட்டிற்கு உணவுக்காக சென்று வரும் நிலையில், நேற்று உணவருந்த இளைஞன் வராததால், வீட்டார் இளைஞனை தேடி சென்றபோது, பூட்டிய வீட்டினுள் படுக்கையில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்