போர் நிறுத்தத்திற்கு முன் தாக்குதல் – டயர் நகரில் 13 பேர் உயிரிழப்பு
லெபனானில் உள்ள டயர் நகரை இஸ்ரேலியப் படைகள் நேற்று இரவு தாக்கியதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் நேஷனல் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 15 பேரை மீட்க தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்ரேலுடன் ஏற்பட்டிருந்த 10 நாள் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவில் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக, நகர அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.





