செய்தி விளையாட்டு

IPL Match 63 – போட்டி மழையால் பாதிப்பு

நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அமகதாபாத்தில் இன்று நடைபெற உள்ள 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத உள்ளன.

ஆட்டம் இரவு 7.30 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மாலை முதல் அகமதாபாத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 7.30 மணிக்கு தொடக்கவேண்டிய ஆட்டம் 9 மணியை நெருங்கும் நிலையில் இன்னும் தொடங்கவில்லை.

மழை தொடர்ந்து பெய்துவருவதால் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இரவு 11 மணிக்குள் மழை நின்றால் குறைந்தது 5 ஓவர்கள் ஆட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மழை தொடர்ந்து நீடித்தால் ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படும்பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் குஜராத் டைட்டன்சின் கனவு தகர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி