இலங்கை

எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் குறைவடையும் – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால்,  வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும், பொருளாதாரம் நிலைபெறும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்படி  91 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் 2.5 சதவீதம்  குறைந்துள்ளதுடன் 182 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் சுமார் 3.4 சதவீதம் குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்