இந்தியா

ஓமன் கடற்பகுதியில் மூழ்கிய இந்தியக் கப்பல்!

ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று சேதமடைந்து விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் 1′ என்ற  பாய்மரக் கப்பல் ஒன்று அதன் இயந்திர கோளாறின் காரணமாக சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பயணித்த 14 மாலுமிகளை அமெரிக்க கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

மத்தியக்கிழக்கு கடற்பகுதிகளில் நிலவும் போர் பதற்றங்களில் 03 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஓமானின் ராஸ் அல் ஹத் கடற்கரையிலிருந்து சுமார் 80 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் தற்போது மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் இயந்திர கோளாறு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே