இலங்கை

இலங்கையில் பொலித்தீனுடன் உணவை உண்ணுமாறு பணித்த அதிபருக்கு இடமாற்றம்!

இலங்கையில் மதிய  உணவை பொலித்தீனில் சுற்றி வைத்து உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாக கூறப்படும் ரம்புக்பிட்டி மத்திய மகா வித்தியாலய அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23.11) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சுற்றப்பட்ட மதிய உணவுத் தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை கட்டாயமாக  உண்ணுமாறு அதிபர் பணித்ததாக செய்தி வெளியாகியது.

இந்த நிலையில் நேற்று கல்வி அமைச்சர் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரை அழைத்து இது குறித்து மேலதிக விவரங்களை பெற்றுள்ாளர்.

குறித்த பாடசாலையின் 11ம் தர மாணவர்கள் குழுவொன்று மதிய உணவை லன்ச் ஷீட்டில் சுற்றப்பட்டு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பாடசாலை பொலித்தீன் அற்ற வலயமாக பராமரிக்கப்படுவதால், குறித்த மதிய உணவு தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு  மாணவர்களை அதிபர் வற்புறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான சம்பவத்திற்கு முகங்கொடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் நேற்று காலை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்ததாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த ஏனைய ஐந்து மாணவர்களும் இன்று (23.11) பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாகவும்,  இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் நேற்று முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, பஸ்பாவின் பிரதேச கல்விப் பணிப்பாளரினால் ஸ்தல விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விசாரணையின் வசதிக்காக சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்