ஆசியா செய்தி

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இம்ரான் கான் கட்சி தொண்டர்கள் போராட்டம்

பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்று முடிவில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றதாக கூறப்படுகிறது.

அதேவேளையில் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

அதன்பின் முதற்கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்பின் மெல்ல மெல்ல முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இன்னும் 8 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துகின்றனர்.

இம்ரான கான், நவாஸ் ஷெரீப் ஆகியோர் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என மாறிமாறி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே நவாஸ் ஷெரீப் கட்சி, பிலாவால் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளையில் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இம்ரான் கான் கட்சி ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது.

நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெள்ளி பெற்றுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content