இலங்கை

வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு சட்ட ரீதியாக செல்லுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஏமாற்று மற்றும் மோசடிக்காரர்களை நம்பி பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டாமென, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றின் சேவைகளை ஒரே இடத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இதற்கமைய, தொழில் திணைக்களத்தால் ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதுடன், EPF பதிவுகளை பரிசீலித்தல், EPF தொடர்பாக பதிவு செய்யாத உறுப்பினர்களை பதிவு செய்தல், விரல் அடையாளங்களை பதிவு செய்தல், பெயர் மற்றும் பதிவுகளில் தவறுகள் காணப்படின் திருத்தம் செய்தல், ஆலோசனை சேவைகள், EPF தொடர்பான தகவல்களை பரிசீலித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்