சிங்கப்பூரில் புதிய திட்டத்திற்கு தயாராகும் அரசாங்கம்
சிங்கப்பூரில் உடற்பயிற்சித் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்காக உடற்பயிற்சி நிபுணர்களை உள்ளடக்கிய தேசியப் பதிவகம் ஒன்றை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறைகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் Eric Chua தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அரசாங்க அமைப்புகள் பதிவுசெய்திருக்கும் உடற்பயிற்சி நிபுணர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உடற்பயிற்சி நிபுணர்கள் மத்தியில் சீரான தன்மை இருப்பதை இந்தத் திட்டம் உறுதிசெய்யும், என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]













