சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞன்
சிங்கப்பூரில் கையில் கோடரியுடன் சுற்றித் திரிந்துகொண்டிருந்த 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Stamford வீதியை கடந்து சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டுநர் நபரின் செயலைக் காணொளியாகப் பதிவுசெய்தார். சம்பவத்தின் தொடர்பில் 71 வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கைகலப்பு நடந்திருப்பதாக பொலிஸார் கூறினர். நேற்று முன்தினம் பின்னிரவு சுமார் 2.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர். அதிகாரி தமது கடமையைச் செய்யவிடாமல் ஆடவர் தடுத்ததாகவும் அரசாங்க ஊழியரிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. […]













