கோவிட் தொற்றால் யாழ்ப்பாணத்தில் மீண்டும் மரணம் பதிவானது
கோவிட் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சிகிச்சையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதற்குரிய தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்தார். அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது ஏப்ரல் 15 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது. அவர் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தொற்றின் […]













