ஐரோப்பா செய்தி

மண்டேல்சனின் நியமன ஆவணங்கள் அடுத்த வார இறுதிக்குள் வெளியிட வேண்டும் – அரசுக்கு அழுத்தம்

  • April 17, 2026
  • 0 Comments

லார்ட் மண்டேல்சனின் நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த வார இறுதிக்குள் வெளியிட வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி படேனொக் வலியுறுத்தியுள்ளார். மூடிமறைப்பு, சாக்குப்போக்கு, தாமதம் எதுவும் இருக்கக் கூடாது என்று அவர் கூறினார். மேலும், அடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு நாடாளுமன்ற வழிமுறையையும் பரிசீலித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற தமக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் அவர் […]

இந்தியா செய்தி

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 03 மசோதாக்களும் மக்களவை வாக்கெடுப்பில் தோல்வி

  • April 17, 2026
  • 0 Comments

தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான 3 மசோதாக்களும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் ஆதரவாக தேவை. அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 326 வாக்குகள் தேவை. அது கிடைக்காத காரணத்தால், மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன. இன்றைய விவாதத்தின்போது, நாட்டில் மக்கள் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை இனி மூடப்படமாட்டாது: ஈரான் உறுதியென ட்ரம்ப் அறிவிப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை இனி ஒருபோதும் மூடப்படமாட்டாது என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடல்வழிப் பாதையை ஒரு ஆயுதமாக பயன்படுத்த மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்படும் என ஈரான் இன்று அறிவித்தது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதிக்கு மட்டுமே இது பொருந்தும் என ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த கால எல்லை எதிர்வரும் […]

ஐரோப்பா

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் – உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாமர்!

  • April 17, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, இங்கிலாந்தும் பிரான்சும் ஒரு பன்னாட்டுப் பணிக்குத் தலைமை தாங்கும் என்று சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘சூழ்நிலைகள் அனுமதித்தவுடன்’ தொடங்கப்படவுள்ள இந்தப் பணி, முற்றிலும் அமைதியான மற்றும் தற்காப்பு சார்ந்ததாக இருக்கும். வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு நம்பிக்கையளிப்பதும், ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதும் இதன் முதன்மை நோக்கங்களாகும். உலகளாவிய வர்த்தகத்தில் ஆர்வம் கொண்ட அனைத்து நாடுகளும் இதில் சேர அழைக்கப்படுகின்றன. […]

ஐரோப்பா

லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை தாக்கப்போவதாக மிரட்டல்!

  • April 17, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை தாக்கப்போவதாக கிடைக்கப்பெற்ற செய்தி தொடர்பில்  பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களைக் கொண்டு தூதரகத்தைத் தாக்கப்போவதாக இணையம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தூதரகத்திற்கு அருகிலுள்ள கென்சிங்டன் கார்டன்ஸ் (Kensington Gardens) பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வீசப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு, அந்தக் காணொளியின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யவும் முயன்று வருகின்றனர். இதற்கிடையே இஸ்ரேலிய தூதரகம் தாக்கப்படவில்லை […]

ஐரோப்பா

ரஷ்யாவின் அடுத்த இலக்காக மாறும் பிரித்தானியா!

  • April 17, 2026
  • 0 Comments

பிரித்தானியா ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளக்கூடும் என பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ அதிகாரி ரிச்சர்ட் கெம்ப்  ( Richard Kemp) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பிரிட்டன் ‘பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படுகிறது’ என்றும், ரஷ்யாவிடமிருந்து மறுக்கக்கூடிய நாசவேலை நடவடிக்கைகளை எதிர்பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக  ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், அதன் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ்,  உக்ரைனிய ட்ரோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய நிறுவனங்களின் பட்டியல், ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு ‘சாத்தியமான இலக்குகளாக காணப்படுகிறது […]

அரசியல் இலங்கை செய்தி

“புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நிதியை மக்களுக்காக பயன்படுத்துக”

  • April 17, 2026
  • 0 Comments

“பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என அரசு எண்ணக்கூடாது. புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கு வளமான எதிர்காலம் அமையும்” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ITAK மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் Gnanamuthu Srinesan தெரிவித்தார். மட்டக்களப்பு, செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) 40 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட ‘ஜனா […]

உலகம் செய்தி

ஆறு வார மோதலுக்குப் பின் அமைதி – லெபனானில் மீள்குடியேற்றம் தொடக்கம்

  • April 17, 2026
  • 0 Comments

பெய்ரூட்டில் நள்ளிரவில் போர் நிறுத்தம் தொடங்கியதை மக்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் வாணவேடிக்கைகளுடன் கொண்டாடினர். காலை நேரத்தில், லெபனானின் தெற்கு பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளில் மக்கள் கூட்டம் திரண்டதா சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் ஹிஸ்புல்லாவின் மையப் பகுதிக்குத் திரும்பும் பயணத்தை புரட்சிகர இசையுடன், அந்த அமைப்பின் மஞ்சள் கொடிகளை அசைத்தபடி தொடங்கினர். இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையில் ஆறு வாரங்கள் நீடித்த கடுமையான மோதலுக்குப் பிறகு இந்த தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. […]

உலகம்

போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டிருக்கும்!

  • April 17, 2026
  • 0 Comments

லெபனானில் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் காலம் முழுவதும், ஹோர்முஸ் ஜலசந்தி அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப்,    “ஈரான் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்பட்டு, முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக உள்ளது என்று ஈரான் இப்போது அறிவித்துள்ளது. நன்றி!” என்று கூறினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் இந்த ஜலசந்தியை முன்னர் […]

உலகம்

எண்ணெய் விலை சரிவு!

  • April 17, 2026
  • 0 Comments

ஈரான் போரில் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு  செய்துள்ளது. அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பான நிகழ்வுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றம் பங்குச் சந்தையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.    

error: Content is protected !!