ஆறு வார மோதலுக்குப் பின் அமைதி – லெபனானில் மீள்குடியேற்றம் தொடக்கம்
பெய்ரூட்டில் நள்ளிரவில் போர் நிறுத்தம் தொடங்கியதை மக்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் வாணவேடிக்கைகளுடன் கொண்டாடினர். காலை நேரத்தில், லெபனானின் தெற்கு பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளில் மக்கள் கூட்டம் திரண்டதா சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் ஹிஸ்புல்லாவின் மையப் பகுதிக்குத் திரும்பும் பயணத்தை புரட்சிகர இசையுடன், அந்த அமைப்பின் மஞ்சள் கொடிகளை அசைத்தபடி தொடங்கினர். இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையில் ஆறு வாரங்கள் நீடித்த கடுமையான மோதலுக்குப் பிறகு இந்த தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. […]













