உலகம்

இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து – 08 பேர் பலி!

  • April 17, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் (Kalimantan) ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஹெலிகாப்டர் நேற்று காலை 8.34 இற்கு பயணத்தை ஆரம்பித்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டிருந்த நிலையில்,  இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் (Kalimantan)  உள்ள காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்தில் 08 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாகவும் அவை  பொன்டியானாக்கிற்கு (Pontianak)  கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த […]

இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கியுள்ள நிலக்கரி மோசடி: விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்!

  • April 17, 2026
  • 0 Comments

நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தியின்போது முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதியால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட, தேசிய அரச […]

இலங்கை

சரத் கொங்கஹகே, தேவப்பிரிய அபேசிங்க ஆகியோருக்கு பிணை

  • April 17, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் […]

ஐரோப்பா

ஹோர்முஸ் ஜலசந்தியை மீளத் திறக்க ஒன்றுக்கூடும் 40 நாடுகள்!

  • April 17, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து விவாதிப்பதற்காக, பாரிஸில் உலக தலைவர்கள் ஒன்றுக்கூடவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டமார் தலைமை தாங்கவுள்ளார். சுமார் 40 நாடுகள் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு பங்கேற்கும் இந்தக் கூட்டம், அமெரிக்க-ஈரானிய போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதிலும், ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையைத் திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தும். இதன்போது  ஜலசந்தியை நிபந்தனையின்றி உடனடியாக மீண்டும் திறப்பதை ஒரு “உலகளாவிய […]

பொழுதுபோக்கு

கதாநாயகியாக களமிறங்கும் வனிதாவின் மகள்!

  • April 17, 2026
  • 0 Comments

வனிதாவின் மகள் ஜோவிகா நடித்திருக்கும் முதல் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ஜோவிகா, எனது முதல் திரைப்படம். அதுவும் தெலுங்கில் MS Raju அவர்களுடன் நேரடியாகப் பணியாற்றுவது, நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் போற்றும் ஒரு அனுபவமாகும். குறிப்பாக, ‘தேவி’, ‘வர்ஷம்’, ‘ஒக்கடு’ இன்னும் பல படங்களை தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பப் பார்த்து வளர்ந்தவள் நான், எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். என்னை நீங்கள் நம்பி, என் மீது […]

உலகம் செய்தி

லெபனானில் போர் நிறுத்தம்: ஈரான் வரவேற்பு!

  • April 17, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் வரவேற்றுள்ளது. எனினும், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த முயற்சி இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் அவநம்பிக்கை காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம், ஏவுகணை சோதனைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

“அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்

  • April 17, 2026
  • 0 Comments

“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு, “ஈரான் உடனான அமைதிப் பேச்சு சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் செல்லக்கூடும். அங்கு நான் இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் […]

இலங்கை செய்தி

பற்றி எரிந்த வீடுகள்: நுவரெலியாவில் நடந்தது என்ன?

  • April 17, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு (16) ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. மூன்று வீடுகளில் வசித்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்கவைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்தால் வீடுகளில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளன. நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்குரிய விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

உலகம் செய்தி

போர் நிறுத்தம்: அமெரிக்காவுக்கு ஐ.நா. பாராட்டு!

  • April 17, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் António Guterres வரவேற்றுள்ளார். இந்த அமைதி முயற்சியை சாத்தியமாக்குவதற்கு பங்காற்றிய அமெரிக்காவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். குறித்த தற்காலிக போர்நிறுத்தம் நிலையான அமைதி மற்றும் நீண்டகால தீர்வுகளை எட்டுவதற்கு ஒரு தொடக்கமாக அமையும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை மதித்து, சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் எனவும் ஐ.நா. செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை செய்தி

இந்திய துணை ஜனாதிபதியை 19 ஆம் திகதி சந்திக்கிறது தமிழரசுக் கட்சி!

  • April 17, 2026
  • 0 Comments

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (19) இலங்கை வருகின்றார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். இருதரப்பு நல்லுறவு மற்றும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணியளவில், கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில், இந்திய துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணனுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு […]

error: Content is protected !!