பொழுதுபோக்கு

மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி!

  • April 17, 2026
  • 0 Comments

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ‘தமிழினி’ என்ற படத்திற்கு ஒரு மென்மையான காதல் பாடலை பாடியுள்ளனர். டி.பி. சரவணன் மற்றும் இயக்குநர் கணேஷ் மூர்த்தி ஆகியோர் தற்போது ‘தமிழினி’ என்ற புதிய படத்தை உருவாக்கி வருகின்றனர். ‘தமிழினி’ திரைப்படம் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கியுள்ளது. இப்படம் தென்மாவட்ட கடலோர பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சந்தோஷ் பாலாஜி […]

செய்தி தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

  • April 17, 2026
  • 0 Comments

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை ஒன்றிய பாஜக அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேற்று நாடாளுமன்றத்தில் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்திற்கு முன் தாக்குதல் – டயர் நகரில் 13 பேர் உயிரிழப்பு

  • April 17, 2026
  • 0 Comments

லெபனானில் உள்ள டயர் நகரை இஸ்ரேலியப் படைகள் நேற்று இரவு தாக்கியதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் நேஷனல் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும்,  இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 15 பேரை மீட்க தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ரேலுடன் ஏற்பட்டிருந்த 10 நாள் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவில் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக, நகர அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்தல்

  • April 17, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாரிஸில் உள்ள எலிசே அரண்மனை சென்றடைந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைச் சந்திக்க உள்ளார். சந்திப்புக்கு முன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஸ்டார்மர், ஈரானில் நடைபெறும் போரால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை குறைப்பதற்கும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கும் தாம் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று தெரிவித்தார். “போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும். அதற்கான ஒப்பந்தமும் அவசியம். ஹார்முஸ் நீரிணை திறந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது […]

இலங்கை செய்தி

தையிட்டி காணி அளவீடு மே 15ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்-வலிகாமம் வடக்கு, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள பொது மக்களின் காணிகளை அளவீடு செய்யும் பணிகள், விகாராதிபதியின் எதிர்ப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களால் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தையிட்டி விகாரையைச் சூழவுள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்வதற்கு, கடந்த 11 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இணங்குமாறு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் யாழ். […]

அரசியல் இலங்கை செய்தி

திடீர் பதவி விலகலுக்கு காரணம் என்ன? வெளியானது பின்புலம்!

  • April 17, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று (17) கையளித்து, பதவி விலகியுள்ளனர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டது. இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் பரபரப்பு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

  • April 17, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே இவர்கள் பதவி விலகியுள்ளனர் என தெரியவருகின்றது. நிலக்கரி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இது தொடர்பில் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகூட முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளனர்.

உலகம் செய்தி

லெபனான் போர் நிறுத்தம்: ட்ரப்பை போற்றி புகழ்கிறது பாகிஸ்தான்!

  • April 17, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் Shehbaz Sharif வரவேற்றுள்ளார். குறித்த நடவடிக்கை அப்பகுதியில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட துணிச்சலான இராஜதந்திர முயற்சிகளால் இந்த அமைதி உடன்படிக்கை சாத்தியமானதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு பாகிஸ்தான் தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடி பேச்சுவார்த்தைகளை […]

இலங்கை செய்தி

யாழில் தாக்குதல் முறியடிப்பு: வாள்களுடன் மூவர் கைது!

  • April 17, 2026
  • 0 Comments

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளனர். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வன்முறை கும்பல் தயாராகிக்கொண்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை தாமதிப்பது பெரும் அநீதி!

  • April 17, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும், வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.” இவ்வாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னதாக, தெரிவுக் குழுவின் செயல்முறையின் முடிவுகளுக்காக ஆணைக்குழு காத்திருக்கிறது. தெரிவுக் குழுவின் முடிவின் அடிப்படையிலேயே, தேர்தல்களை நடத்துவது குறித்து எங்களால் தீர்மானிக்க முடியும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவும், தெரிவுக்குழுவின் முன் […]

error: Content is protected !!