உலகம் செய்தி

வான்பரப்பை மீண்டும் திறந்தது ஈரான்!

  • April 18, 2026
  • 0 Comments

சர்வதேச விமான போக்குவரத்துக்காக தமது வான்பரப்பை ஈரான் மீண்டும் திறந்துள்ளது என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வான் பரப்பை ஈரான் மூடியது. பாதுகாப்பு கருதி இவ்வாறு மூடப்பட்டிருந்த வான்வழிப் பாதைகள், தற்போது பகுதி அளவில் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. குறிப்பாக, ஈரானின் கிழக்குப் பகுதியில் உள்ள வான்வழிப் பாதைகள் மற்றும் சில முக்கிய விமான நிலையங்கள் வழியாகப் பயணங்கள் படிப்படியாகத் […]

உலகம் செய்தி

சீன ஜனாதிபதியுடனான சந்திப்பை உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்!

  • April 18, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டமை தொடர்பில் சீன ஜனாதிபதி Xi Jinping மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சீனாவில் நடைபெறவுள்ள அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பு சிறப்பானதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் மிகப்பெரிய நாடான சீனா, தனது தேவைக்கான எண்ணெயில் சுமார் 38 சதவீதத்தை ஹோர்முஸ் […]

உலகம் செய்தி

ஈரான்மீது 10,800 குண்டுவீச்சுத் தாக்குதல்கள்!

  • April 18, 2026
  • 0 Comments

ஈரான்மீது 10,800 குண்டுவீச்சுத் தாக்குதல்களை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஏப்ரல் 7 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள்ளேயே மேற்படி தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளன. அதேவேளை, லெபனானில் 14,900-க்கும் மேற்பட்ட பீரங்கித் தாக்குதல்களையும், 2,500 வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரான் மற்றும் லெபனானில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இலங்கை

மகனுக்காக உயிர் தியாகம் செய்த தந்தை!

  • April 18, 2026
  • 0 Comments

மிஹிந்தலையில் தனது மகனை காப்பாற்றுவதற்காக தந்தையொருவர் உயிர் தியாகம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதுடைய குறித்த நபர் மரடன் குளம் ஏரியில் தனது 12 வயது மகனும், மற்றொரு குழந்தையும் நீரில் மூழ்குவதை கண்ட நிலையில், அவர்களை காப்பாற்ற ஏரியில் குதித்துள்ளார். இதன்போது குழந்தைகளை காப்பாற்றிய அவர், பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலம் அனுராதபுர மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் செய்தி

மீண்டும் குண்டுகளை வீச நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை! (Video)

  • April 18, 2026
  • 0 Comments

ஏப்ரல் 22 ஆம் திகதிக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் ‘போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?’ என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அவர், “ ஈரான் உடனான […]

விளையாட்டு

IPL -2026: இன்று இரு ஆட்டங்கள்!

  • April 18, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 27 ஆவது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings CSK, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Chennai Super Kings ஆகிய அணிகள் இன்று (18) மோதுகின்றன. இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்த நிலையில் […]

விளையாட்டு

பங்களாதேஷை வீழ்த்தியது நியூசிலாந்து!

  • April 18, 2026
  • 0 Comments

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கிடையிலான ODI போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் ODI போட்டி, 3 T20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் முதலாவது ODI போட்டி நேற்று டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. 248 என்ற வெற்றி இலக்கை […]

இந்தியா செய்தி

உலகின் செல்வாக்குமிக்க தலைவராக பிரதமர் மோடி முதலிடம்!

  • April 18, 2026
  • 0 Comments

உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற ஆய்வு நிறுவனம், பல்வேறு நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அண்மையில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்று அதாவது 70 சதவீத மக்களின் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை கடந்தது முதல் சுற்றுலாக் கப்பல்!

  • April 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட பிறகு, முதல் முறையாக ஒரு சுற்றுலா கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளது. ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பதற்கு ஈரான் இணங்கிய நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பான பயணம் இடம்பெற்றுள்ளது. செலஸ்டியல் டிஸ்கவரி என்ற பெயருடைய இந்த கப்பல், துபாயில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்த பிறகு தற்போது ஓமானை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. கப்பல்களைக் கண்காணிக்கும் MarineTraffic தளம், இந்தப் பயணத்தின் போது கப்பலில் பயணிகள் யாரும் இல்லை […]

ஆஸ்திரேலியா செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கட்டணம் அறிவிடக்கூடாது: ஆஸ்திரேலியா வலியுறுத்து!

  • April 18, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட்டுள்ளமை ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese வரவேற்றுள்ளார். “தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் கட்டணங்கள் இல்லாத சூழலை நாங்கள் விரும்புகிறோம். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிட்னியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். “ ஆசியாவிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் வர்த்தகப் பொருட்களில் பெரும்பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றது. எனவே, அங்கு ஏற்படும் பாதிப்புகள் ஆசியாவிற்கு அதிக அழுத்தத்தை அளிக்கின்றன.”எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேற்காசிய மோதலை […]

error: Content is protected !!