மகனுக்காக உயிர் தியாகம் செய்த தந்தை!
மிஹிந்தலையில் தனது மகனை காப்பாற்றுவதற்காக தந்தையொருவர் உயிர் தியாகம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதுடைய குறித்த நபர் மரடன் குளம் ஏரியில் தனது 12 வயது மகனும், மற்றொரு குழந்தையும் நீரில் மூழ்குவதை கண்ட நிலையில், அவர்களை காப்பாற்ற ஏரியில் குதித்துள்ளார்.
இதன்போது குழந்தைகளை காப்பாற்றிய அவர், பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் அனுராதபுர மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




