உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் 

  • April 18, 2026
  • 0 Comments

  ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கச்சா எண்ணெய் ஏற்றிய இந்தியக் கொடியேற்றிய கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக இந்திய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் “சன்மார் ஹெரால்டு” என அடையாளம் காணப்பட்ட அந்தக் கப்பலும், அதில் இருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அதே நாளில் சுமார் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா, ஈரானின் தூதுதரை வரவழைத்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். முன்னதாக, […]

உலகம் செய்தி

ஈரான் கடந்த 47 ஆண்டுகளைப் போன்றே  தந்திரமாக செயற்படுகிறது – ட்ரம்ப் கருத்து

  • April 18, 2026
  • 0 Comments

ஈரானுடன் தற்போது சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில்  ஈரான் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை, ஈரான் கடந்த 47 ஆண்டுகளைப் போன்றே சற்று தந்திரமாக செயற்படுகிறது என்றும் அவர் கூறினார். ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முயற்சிக்கலாம் எனவும், ஆனால் அமெரிக்காவை அச்சுறுத்துவதை அனுமதிக்கமாட்டோம் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஈரான் தொடர்பாக […]

இலங்கை செய்தி

போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

  • April 18, 2026
  • 0 Comments

கடலில் இருந்து மீட்கப்பட்ட  போதைப்பொருட்களுடன்  இலங்கை கடற்படையால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆழ்கடலில் மீன்பிடிப் படகொன்றில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்றபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக அந்தப் படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. முதற்கட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேக நபர்களின் வயது 24, 36, 46 மற்றும் 48 என்றும், அவர்கள் தேவினுவர பகுதியைச் […]

இந்தியா செய்தி

மோடி, அமித் ஷாவால் ஸ்டாலினை பணியவைக்க முடியாது

  • April 18, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது  என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் திருச்சியில்  கருத்து தெரிவித்த அவர், “ டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன் என்றும் அவர் கூறினார். திருச்சி துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் ‘Yellow Line’ கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியது இஸ்ரேல்!

  • April 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் ‘மஞ்சள் கோடு’ (Yellow Line) என்ற புதிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது. காசா பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிரிவினையைப் போலவே, இந்த எல்லைக்கோடு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான இடைவெளியைத் தீர்மானிக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தாலும், இந்த எல்லையைத் தாண்டி வரும் நபர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இராணுவம் எச்சரித்துள்ளது. அண்மையில் இந்த எல்லையை மீறியதாகக் கூறப்படும் ஆயுததாரிகள் […]

ஐரோப்பா செய்தி

லெபனானில் பிரான்ஸ் அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

  • April 18, 2026
  • 0 Comments

லெபனானின் தென்பகுதியில் இன்று காலை நடந்த தாக்குதலில், சர்வதேச அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரெஞ்சு வீரர் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் X தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய நாடுகளின் இடைக்கால அமைதிப்படை பணியில் ஈடுபட்டிருந்த மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக மக்ரோன் கூறியுள்ளார். இந்நிலையில் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய லெபனான் அதிகாரிகள் […]

அரசியல் இலங்கை செய்தி

ஒற்றுமைக்கான முயற்சியை தகர்த்தது தமிழ்க் காங்கிரஸ்: தமிழரசுக் கட்சி விசனம்!

  • April 18, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு ‘புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- […]

இலங்கை செய்தி

“மன்னாரில் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தம்”

  • April 18, 2026
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்குப் பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் […]

இலங்கை செய்தி

அரசியல் தீர்வு திட்ட முயற்சியை குழப்பியடிக்காதீர்: சுரேஷ் கோரிக்கை!

  • April 18, 2026
  • 0 Comments

பொதுத்தீர்வு ஆவணத்தை உருவாக்குவதற்கான தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஐக்கிய முயற்சியை முறியடிக்க வேண்டாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் சாசனத்திற்கு முன் வைக்கப்பட வேண்டிய பொதுத் தீர்வு ஆவணத்தை உருவாக்கும் கூட்டு நடவடிக்கையை தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் ‘ஈழத் தமிழர் அரசியல் அமைப்பு […]

இலங்கை செய்தி

கொழும்பில் விசேட போக்குவரத்து

  • April 18, 2026
  • 0 Comments

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி நாளை (19) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், அங்கிருந்து அவர் பிரமுகர் வாகனப் பேரணியில் காலி முகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார். இதற்கமைய, அந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் […]

error: Content is protected !!