ட்ரம்பின் கருத்துக்கு ஈரானிய அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ஈரான் தொடர்பான கருத்துகள், ஈரானிய அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ட்ரம்ப், ஈரானிடமிருந்து முக்கிய சலுகைகள் பெறப்பட்டதாக கூறியதுடன், அணு திட்டம், ஹோர்முஸ் நீரிணை மற்றும் பொருளாதார தடைகள் குறித்து பல்வேறு கூற்றுகளை வெளியிட்டார். அவரது கூற்றுகளின்படி, குண்டுவீச்சில் சேதமடைந்த அணு தளங்களில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம், இரு நாடுகளும் இணைந்து அகற்றி அமெரிக்காவிற்கு மாற்றப்படும் என்றும், ஈரான் தனது மண்ணில் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். […]













