உலகம் செய்தி

மொராக்கோவில் பலஸ்தீன ஆதரவு பேரணி – இஸ்ரேலிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு

  • April 19, 2026
  • 0 Comments

மொராக்கோ தலைநகரான ரபாத் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் கொண்டு வர முயற்சிக்கும் புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிராகவும் பேரணி நடத்தினர். முகமது V அவென்யூவில் சுமார் 5,000 பேர் கூடினர். அவர்கள் பலஸ்தீன மற்றும் மொராக்கோ தேசியக் கொடிகளை ஏந்தி, மரண தண்டனைக்கு எதிராகவும், காசாவில் நடைபெறும் போருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர் என செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் “பலஸ்தீனத்திற்கான தேசிய நடவடிக்கைக் குழு” என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் […]

இந்தியா செய்தி

விஜய், சங்கீதா இடையேயான வழக்கு – தேர்தலுக்கு முன் விவாகரத்து ?

  • April 19, 2026
  • 0 Comments

தவெக தலைவரும், நடிகருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய வழக்கு நாளை 20ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது. சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை  விசாரணைக்கு வரவுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நாளை (20) நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு […]

இலங்கை செய்தி

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ்க் கட்சிகள்

  • April 19, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள்  பங்கேற்றுள்ளனர். இதேவேளை மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் […]

இலங்கை செய்தி

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI – இந்திய துணை ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

  • April 19, 2026
  • 0 Comments

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என இந்திய துணை ஜனாதிபதி சீ.பி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் காலி மற்றும் மாத்தளை மாவட்ட மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை இன்று (19) கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், “இன்று கொழும்பை வந்தடைந்தது முதல் புதிய உணர்வு ஏற்பட்டுள்ளது. அது பக்கத்து நாட்டுக்கு சென்றுள்ளதை […]

இலங்கை செய்தி

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை முதல் வழமைக்கு

  • April 19, 2026
  • 0 Comments

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள், நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது..

உலகம் செய்தி

பாகிஸ்தானுக்கு இதுவரை ஈரானிய பேச்சுவார்த்தைக் குழு எதுவும் அனுப்பப்படவில்லையென தகவல்

  • April 19, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்புவது குறித்து ஈரான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “கடற்படை முற்றுகை தொடரும் வரை பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக் குழு அனுப்பப்படாது” என ஈரான் தரப்பு கூறியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை குறித்த டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு அமுலில் இருக்கும் வரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறாது” என்று ஈரானிய குழு வலியுறுத்தியதாக தஸ்னிம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உலகம் செய்தி

போர் தொடர்பான பதிவுகள் – அமெரிக்க–குவைத் பத்திரிகையாளர் குவைத்தில் கைது

  • April 19, 2026
  • 0 Comments

போர் தொடர்பான சமூக ஊடக பதிவுகளுக்காக அமெரிக்க–குவைத் பத்திரிகையாளர் அகமது ஷிஹாப்-எல்டின் குவைத் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகக் கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 41 வயதான ஷிஹாப்-எல்டின், குவைத்தில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்க சென்றிருந்த நிலையில், மார்ச் 2-ஆம் திகதிக்குப் பின்னர் அவர் இணையத்தில் எந்தப் பதிவும் இடவில்லை மற்றும் பொதுவெளியிலும் தோன்றவில்லையென நியூயோர்க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ)  தெரிவித்துள்ளது. அவர்மீது தவறான தகவல்களைப் பரப்புதல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் […]

ஐரோப்பா செய்தி

சட்டங்களை மீறும்  நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க முடியாது : இஸ்ரேல்–ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை நிறுத்த ஸ்பெயின் வலியுறுத்தல்

  • April 19, 2026
  • 0 Comments

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகிறது என்று குற்றம்சாட்டி, ஐரோப்பிய ஒன்றியம்–இஸ்ரேல் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரியுள்ளார். அண்டலூசியாவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஸ்பெயின் அரசு சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். “சர்வதேச சட்டங்களை மீறும்  நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க முடியாது” என்று அவர் கூறினார். இதனிடையே, ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் […]

உலகம்

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் – ட்ரம்ப் மிரட்டல்!

  • April 19, 2026
  • 0 Comments

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான்  ஹோர்முஸ் ஜலசந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்துள்ளது  எனக் கூறிய அவர்,  இது   போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரான் ஒரு பிரெஞ்சு கப்பல் மற்றும் ஒரு இங்கிலாந்து சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. ஈரான் […]

உலகம் செய்தி

ஈரான் போர்நிறுத்தத்தை மீறியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு

  • April 19, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில்  துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஈரான்   போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தத் தாக்குதல் ஒரு பிரெஞ்சு கப்பலும், பிரித்தானியாவை சேர்ந்த ஒரு சரக்குக் கப்பலையும் இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நீரிணையை மூடுவதற்கான ஈரானின் முடிவை விசித்திரமானது என விமர்சித்த […]

error: Content is protected !!