செய்தி தமிழ்நாடு

சொத்து மதிப்பை குறைத்து காட்டிய விஜய் – முறைகேடானது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

  • April 20, 2026
  • 0 Comments

சட்டசபைத் தேர்தலுக்காக இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபா சொத்து மதிப்பை குறைத்து காட்டியமை முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தலில் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த […]

பொழுதுபோக்கு

பரப்புரை காரில் மணமக்கள்! விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி

  • April 20, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது காரில் மணமக்களை நேரில் அழைத்து வாழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அப்போது, அந்த வழியாக வந்த மணமக்கள் இருவரைத் தனது பரப்புரை வாகனத்திற்குள்ளேயே அழைத்து வாழ்த்தியுள்ளார். வழக்கமாகத் தலைவர்கள் தங்களது வாகனத்தின் மேலிருந்தே வாழ்த்துத் தெரிவிக்கும் நிலையில், பாதுகாப்பு வளையங்களையும் கடந்து திருமணப்பரிசாக மணமக்களை அருகில் அழைத்து விஜய் உரையாடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. […]

இலங்கை செய்தி

சீதையம்மனை வழிபட்டு நாடு திரும்பினார் இந்திய துணை ஜனாதிபதி!

  • April 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் இன்று வழிபாட்டில் ஈடுபட்டார். புனித ராமாயணத்துடன் தொடர்புடைய இந்த ஆலயம், இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான ஆழமான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளை நினைவூட்டும் அடையாளமாக திகழ்கிறது. அதேவேளை, நுவரெலியா ராகலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மலையக மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்டத்தையும் துணை ஜனாதிபதி பார்வையிட்டார். மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்த இந்திய […]

இலங்கை செய்தி

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம்!

  • April 20, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முறை மற்றும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு எதிராக டெல் அவிவ் Tel Aviv நகரில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. போராட்டக்காரர்கள், பிரதமரை ஒரு பொய்யராகச் சித்தரிக்கும் வகையில் நீண்ட மூக்குடன் கூடிய முகமூடிகளை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசாங்கத்தின் ஊழல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை விமர்சித்த மக்கள், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஈரான் மற்றும் லெபனான் உடனான மோதல்களைக் கையாளுவதில் நெதன்யாகு நிர்வாகம் தோல்வியடைந்துள்ளதாகக் கருதும் பொதுமக்கள், […]

உலகம்

நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!

  • April 20, 2026
  • 0 Comments

நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் (Wellington), இரவு முழுவதும் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வெலிங்டன் மேயர் ஆண்ட்ரூ லிட்டில் (Andrew Little), இரவு முழுவதும் பெய்த இந்தத் தீவிர மழையைப் போன்ற ஒன்றை “முன்னெப்போதும் கண்டதில்லை” என்று கூறினார். ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நகரில் 77 மி.மீ மழை பெய்ததாகவும், இதுவே இதுவரை பதிவானதிலேயே மிக […]

ஐரோப்பா

மீண்டும் உயர்ந்த எண்ணெய் விலை – இங்கிலாந்திற்கு பெரும் பாதிப்பு!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரானிய சரக்குக் கப்பலான ‘தௌஸ்கா’வை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது. இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 05 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 94.72 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை மீற முயன்றதற்காக ‘தௌஸ்கா’ கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்க படைகள் தெரவித்துள்ளன. இது அமைதி முயற்சிகளையும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் […]

உலகம்

போர்னியோ தீவில் தீ விபத்து – 9000 பேர் இடப்பெயர்வு!

  • April 20, 2026
  • 0 Comments

போர்னியோ (Borneo) தீவில் உள்ள கடலோர குடியிருப்பில் நேற்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 1000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 9000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மேலே தூண்களின் மீது கட்டப்பட்டிருந்த வரிசையான மர வீடுகள் முழுவதுமாக பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும், கட்டிடங்கள் மிக நெருக்கமாக அமைந்திருந்ததும் தீ மேலும் பரவ உதவியதாகவும், அதே சமயம் குறுகிய அணுகு பாதைகளும், குறைந்த அலை நிலைகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவசரகாலக் குழுவினர் சென்றடைவதை தாமதப்படுத்தியதாகவும் […]

உலகம்

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை – 9,560 பாலஸ்தீனியர்கள் தடுத்துவைப்பு!

  • April 20, 2026
  • 0 Comments

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் குடியேறிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,151 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 11,885இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டில் இருந்து 23,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 1 நிலவரப்படி, குறைந்தது 9,560 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 3,532 பேர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக […]

உலகம் முக்கிய செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

  • April 20, 2026
  • 0 Comments

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

உலகம் செய்தி

‘செறிவூட்டப்பட்ட யுரேனியம்’ – ஈரானின் அதிரடி முடிவு! அமெரிக்கா கொதிப்பு!!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் Saeed Khatibzadeh திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல யுரேனிய விவகாரம் குறித்து மேலும் விவாதிக்க ஈரான் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இந்த உறுதியான நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அத்துடன், அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் உள்ளன என […]

error: Content is protected !!