உலகம்

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை – 9,560 பாலஸ்தீனியர்கள் தடுத்துவைப்பு!

  • April 20, 2026
  • 0 Comments

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் குடியேறிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,151 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 11,885இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டில் இருந்து 23,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 1 நிலவரப்படி, குறைந்தது 9,560 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 3,532 பேர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக […]

உலகம் முக்கிய செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

  • April 20, 2026
  • 0 Comments

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

உலகம் செய்தி

‘செறிவூட்டப்பட்ட யுரேனியம்’ – ஈரானின் அதிரடி முடிவு! அமெரிக்கா கொதிப்பு!!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் Saeed Khatibzadeh திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல யுரேனிய விவகாரம் குறித்து மேலும் விவாதிக்க ஈரான் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இந்த உறுதியான நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அத்துடன், அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் உள்ளன என […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு டெல்லி வலியுறுத்து!

  • April 20, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் நடத்தும்படி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவைத் தாம் நேரில் சந்தித்துப் பேசிய போது கேட்டுக்கொண்டார் என இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏழு பேரை நேற்றுப் பிற்பகல் கொழும்பில் சந்தித்த சமயமே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றே நியாயமானதாகவும், நின்று, நிலைத்து, நீடிக்க கூடியதாகவும் இருக்கும் என்பதை தமிழர் தரப்பு பிரதிநிதிகள் […]

இலங்கை

கிரகரி வாவி சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்த திட்டம்

  • April 20, 2026
  • 0 Comments

நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார். நேற்று (19) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அதிவேகமாக வந்த மற்றொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கிரகரி வாவியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எவ்வாறாயினும், அங்கிருந்த […]

இந்தியா செய்தி

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

  • April 20, 2026
  • 0 Comments

தமிழகம் விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி இன்று (21) உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியல் பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர். […]

உலகம்

இயேசு கிறிஸ்து சிலை சிதைப்பு: விசாரணைகள் ஆரம்பம்

  • April 20, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே,  இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு விவாதங்கள் எழும்பி வருகின்றது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இப் படம்  சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் செய்தி

அமெரிக்க ராணுவ கப்பல்கள்மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

  • April 20, 2026
  • 0 Comments

ஓமான் வளைகுடாவில் அமெரிக்க ராணுவ கப்பல்கள்மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் சரக்குக் கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியதற்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. மேற்படி தாக்குதலில் அமெரிக்கக் கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், பாரிய தேசங்கள் ஏற்பட்டிருக்காது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

உலகம்

ஈரான் விமான நிலையங்கள் 95 சதவீதம் பாதுகாப்பாக உள்ளன!

  • April 20, 2026
  • 0 Comments

ஈரானின் விமான நிலையங்களில்   சுமார் 95 சதவீதம் அப்படியே இருப்பதாகவும், செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் சங்கத்தின் செயலாளரை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் சுமார் 20 20 விமானங்கள் மட்டுமே கடுமையாக சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வணிக விமானப் போக்குவரத்திற்காக ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறக்கத் தயாராகி வரும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

உலகம்

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணை இரத்து!

  • April 20, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் வழக்கில் இந்த வாரம் நடைபெறவிருந்த விசாரணையை  ஜெருசலேம் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. “பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர” காரணங்களை மேற்கோள்காட்டி நெதன்யாகு விசாரணையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு 2019-ஆம் ஆண்டு முதல் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார். அவரது நீதிமன்ற வருகைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது. காசா, லெபனான் மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் […]

error: Content is protected !!