இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI – இந்திய துணை ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என இந்திய துணை ஜனாதிபதி சீ.பி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் காலி மற்றும் மாத்தளை மாவட்ட மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை இன்று (19) கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், “இன்று கொழும்பை வந்தடைந்தது முதல் புதிய உணர்வு ஏற்பட்டுள்ளது. அது பக்கத்து நாட்டுக்கு சென்றுள்ளதை […]













