பாகிஸ்தானுக்கு இதுவரை ஈரானிய பேச்சுவார்த்தைக் குழு எதுவும் அனுப்பப்படவில்லையென தகவல்
பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்புவது குறித்து ஈரான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கடற்படை முற்றுகை தொடரும் வரை பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக் குழு அனுப்பப்படாது” என ஈரான் தரப்பு கூறியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை குறித்த டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு அமுலில் இருக்கும் வரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறாது” என்று ஈரானிய குழு வலியுறுத்தியதாக தஸ்னிம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




