காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை – 9,560 பாலஸ்தீனியர்கள் தடுத்துவைப்பு!
காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் குடியேறிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,151 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 11,885இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023 ஆம் ஆண்டில் இருந்து 23,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 1 நிலவரப்படி, குறைந்தது 9,560 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,532 பேர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





