உலகம்

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான புலம்பெயர் குழந்தைகள் : விசாரணைக்கு பரிந்துரை!

  • April 20, 2026
  • 0 Comments

நியூயார்க்கில் உள்ள புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கான காப்பகமான ‘சில்ட்ரன்ஸ் வில்லேஜ்’, (Children’s Village) குழந்தைகள் மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளது. குறித்த காப்பகத்தில், குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் ‘சிவப்பு அறையில்’ தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட தீங்கு விளைவிற்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பதின்ம வயதுடைய சிறுவன் ஒருவர் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட முறை அடித்து துன்புறுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. டாப்ஸ் ஃபெர்ரியில் (Dobbs Ferry) அமைந்துள்ள இந்தக் காப்பகம், ‘குழந்தைகளின் நலன் குறித்த […]

இலங்கை செய்தி

தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் 2026 இல் மின் உற்பத்தி 50 வீதத்தால் வீழ்ச்சியடையும் – சுஜீவ

  • April 20, 2026
  • 0 Comments

தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் 2026 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி 50 வீதத்தால் வீழ்ச்சியடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான காரியாலயத்தில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள போதிலும், அமைச்சர்களுடைய வங்கி கணக்குகள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் இரட்டை போர் நிறுத்தம் – தற்காலிக அமைதி

  • April 20, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் தற்போது இரண்டு பகுதிகளில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயும், மற்றொன்று இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயும் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார போர் நிறுத்தம் புதன்கிழமை நிறைவடையவுள்ளது. இதனிடையே, ஓமான் வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றிய சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனை போர் நிறுத்த மீறல் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, இஸ்ரேல் […]

இலங்கை செய்தி

ஊழல் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சர் பியசேனவுக்கு பிணை

  • April 20, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு அவர், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பணியாற்றியபோது உரிய சட்ட நடைமுறைகளை மீறி காலி மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாக நியமித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. […]

இலங்கை செய்தி

ஆட்சியை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது -மஹிந்த

  • April 20, 2026
  • 0 Comments

ஆட்சியை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். இம்முறை மே தினம் பௌத்தர்களின் புனித […]

இலங்கை செய்தி

இந்திய துணை ஜனாதிபதிக்கு தமிழரசுக் கட்சி அவசரக் கடிதம்!

  • April 20, 2026
  • 0 Comments

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீள் வருகை மற்றும் அது தொடர்பான நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “நேற்று எம்முடன் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தந்தமைக்காகவும், அந்தச் சந்திப்பின் போது இலங்கைக்குத் திரும்பி வரவிருக்கும் தமிழ் அகதிகள் தொடர்பாகத் தாங்கள் வெளியிட்ட ஆக்கபூர்வமான கருத்துக்களுக்காகவும் […]

இலங்கை செய்தி

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

  • April 20, 2026
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் “வருடாந்த பொருளாதார ஆய்வு 2025′ , ‘நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025’” ஆகிய இரண்டு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (20) கையளிக்கப்பட்டன. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவினால் இந்த இரு அறிக்கைகளும் இவ்வாறு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் அதன் முக்கிய வெளியீடான ‘2025 வருடாந்த பொருளாதார ஆய்வு’ அறிக்கை ஊடாக “ பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணுதல், […]

உலகம்

ஜப்பானை தாக்கிய சுனாமி!

  • April 20, 2026
  • 0 Comments

ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவாத்தே (Iwate) மாகாணத்தில் அமைந்துள்ள குஜி (Kuji) துறைமுகத்தில் 80 சென்டிமீட்டர் உயரத்திலும், மியாகோ (Miyako ) துறைமுகத்தில் 40 சென்டிமீட்டர் உயரத்திலும் சுனாமி அலைகள் தாக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொக்கைடோ (Hokkaido), ஆமோரி (Aomori) மற்றும் இவாத்தே (Iwate) மாகாணங்களின் சில பகுதிகளுக்கு 3 மீட்டர் உயரம் வரையிலான சுனாமிகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் நிலநடுக்கம் மற்றும் […]

உலகம்

கரீபியன் கடற்பகுதியில் படகு மீது தாக்குதல் – 03 பேர் பலி!

  • April 20, 2026
  • 0 Comments

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்கக் கடல் பகுதிகளிலும் கிழக்கு பசிபிக் பெருங்கடலிலும் போதைப்பொருள் கடத்துவதாகக் கூறப்படும் கப்பல்களைக் குறிவைத்து டிரம்ப் நிர்வாகம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையினரின் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை   குறைந்தது 181 பேர் உயிரிழந்துள்ளனர். ‘போதைப்பொருள் பயங்கரவாதத்தை’ எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் […]

இலங்கை செய்தி

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு!

  • April 20, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார். வலுசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயகொடி பதவி விலகியதை அடுத்தே, அனுர கருணாதிலக […]

error: Content is protected !!