பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்தை இணைக்கும் அதிவேக ரயில் சேவை!
பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்தை இணைக்கும் ஒரு புதிய அதிவேக ரயில் இணைப்பு அடுத்த வருடத்தில் (2027) சோதனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் இடையேயான ரயில் சேவையை பேசல் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை SNCB, SNCF Voyageurs மற்றும் சுவிஸ் ஃபெடரல் ரயில்வேஸ் (SBB) ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்கின்றன.
இந்த சோதனை ஓட்டமானது குறுகிய தூர விமானப் பயணங்களுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து இடையேயான எல்லை தாண்டிய ரயில் பயணத்தை மேலும் மேம்படுத்துவதோடு, லண்டன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட இடங்களுக்குப் புதிய இணைப்புகளையும் உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.




