துருக்கியில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
துருக்கியில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 6:20 மணியளவில் மலாத்யா மாகாணத்தின் பட்டல்காசி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மலாத்யா, எலாசிக், அதியமான், துன்செலி மற்றும் ஷான்லியுர்ஃபா மாகாணங்களிலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எந்தவிதமான பாதகமான சூழ்நிலைகள் குறித்தும் தகவல்கள் இல்லை, என்றால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றான துருக்கியில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5.0 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமாவது பதிவாகும்.




