இந்தோனேசியாவில் கோர விபத்து – 10இற்கும் மேற்பட்டோர் பலி
இந்தோனேசியாவில் பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில், திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் டிரக் ஒன்று இரண்டு லொரிகளுக்கு இடையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து , ஜாவா மாகாணத்தின் இந்திரமாயு மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
திறந்தவெளி பிக்கப் டிரக் ஒன்று ‘யு’ திருப்பம் செய்ய முயன்றபோது, பின்னால் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பலத்த மோதலின் தாக்கத்தால், பிக்கப் டிரக்கில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




