ஐரோப்பா

பிரான்ஸில் சமூக ஊடகத் தடை கட்டுப்பாடு – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

குறித்த சட்டமூலமானது கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

15  வயதுக்குட்பட்ட சிறார்கள் சில இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதன் மூலம், வயது வந்தவர்கள் உட்பட ஒவ்வொருவரும் அவற்றை அணுகுவதற்கு முன்பு தங்கள் வயதை நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

ஆனால் அத்தகைய சான்று வழங்கப்பட வேண்டிய நிபந்தனைகளையும் வரம்புகளையும் குறிப்பிடத் தவறியுள்ளதாகவும், இதன்மூலம்  சட்டப் பாதுகாப்புகளை சட்டமன்றம் நிறுவவில்லை,” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை அங்கீகரித்திருந்தனர்.

இதன் மூலம், டிசம்பர் மாதம் 16 வயதுக்குட்பட்டவர்கள் ஃபேஸ்புக் Facebook , டிக்டாக் TikTok  மற்றும் யூடியூப் YouTube உள்ளிட்ட தளங்களைப் பயன்படுத்துவதை பிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்