பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்புகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்
பிரித்தானியாவின் பாதுகாப்பு தற்போது ஆபத்தில் உள்ளதாக நேட்டோவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான லார்ட் ஜார்ஜ் ராபர்ட்சன் (Lord George Robertson) தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து கவலை வெளியிட்ட அவர், இராணுவத்திற்கு தேவையான முதலீடுகளைச் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
லார்ட் ராபர்ட்சன், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிக நடவடிக்கைகள் அவசியம் என்றும், தற்போதைய சூழலில் பிரித்தானியா போதிய அளவு தயாராக இல்லை என்றும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் தனது பதிவில், பாதுகாப்புத் துறையில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
அரசாங்கம் முன்வைத்துள்ள நீண்டகால பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் விரைவில் இறுதிப்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்





