ஐரோப்பா செய்தி

பேசுபொருளான சவுத்போர்ட் சம்பவம் – ஏன் தடுக்கப்படவில்லை?

சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பத்தை தடுக்க தவறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்தக் சம்பவம் இடம்பெற்றிருக்காது என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதையடுத்து
குடும்பங்களின் சட்டப் பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன வகுப்பொன்றிற்குள் நுழைந்த 17 வயது சிறுவன், அங்கிருந்த சிறுவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டத்தில் 03 சிறுமிகள் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணையில், பெற்றோர்கள் மற்றும் பல அரசு அமைப்புகளின் கடுமையான தவறுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும், முகமைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றக் குறைபாடுகள் காரணமாக, இந்தத் தாக்குதல் “முன்கூட்டியே கணிக்கக்கூடியதும் தடுக்கக்கூடியதும்” இருந்தபோதும் தடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

குடும்பங்களின் வழக்கறிஞர் கிறிஸ் வாக்கர், ஐந்து முக்கிய அரசு அமைப்புகள் மீது கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

அவை, தடுப்பு திட்டம், லங்காஷயர் காவல்துறை, சமூக சேவைகள், மற்றும் குழந்தை மனநல சேவைகள் இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது இங்கிலாந்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி