போர்னியோ தீவில் தீ விபத்து – 9000 பேர் இடப்பெயர்வு!
போர்னியோ (Borneo) தீவில் உள்ள கடலோர குடியிருப்பில் நேற்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் 1000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 9000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு மேலே தூண்களின் மீது கட்டப்பட்டிருந்த வரிசையான மர வீடுகள் முழுவதுமாக பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றும், கட்டிடங்கள் மிக நெருக்கமாக அமைந்திருந்ததும் தீ மேலும் பரவ உதவியதாகவும், அதே சமயம் குறுகிய அணுகு பாதைகளும், குறைந்த அலை நிலைகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவசரகாலக் குழுவினர் சென்றடைவதை தாமதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் மேற்படி தீ விபத்தினால் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





