இலங்கை

பிரபல ஐஸ் போதை வியாபாரி காத்தான்குடியில் கைது

காத்தான்குடியில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பிரபல ஐஸ் போதை வியாபாரியொருவர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.

அவர் இக் கைது சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் காத்தான்குடி டீன் வீதி, ஜவ்பர் ஆலிம் வீதியில் குறித்த வியாபாரி ஐஸ் போதை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5850 மில்லி கிராம் மற்றும் 19000.00 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர் ஏற்கனவே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை வழங்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என குறிப்பிட்டார்.

காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலின் கீழ் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தலைமையிலான காவல்துறை குழுவினரே இச்சுற்றிளைப்பினை மேற்கொண்டனர்.

கைதான சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்