இலங்கை செய்தி

கனடாவில் இருந்து வந்தவரால் கைவிடப்பட்ட பொதி!!! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய போதைப் பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொலைந்து போன பயணப் பொதிகளில் இருந்து 19 கிலோ 588 கிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து டுபாய்க்கு கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருள் துபாயில் இருந்து நவம்பர் 14 ஆம் திகதி பிற்பகல் 02.40 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 10 கோடி ரூபா என பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்கள் மேல் மாகாண புலனாய்வு தகவல் பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்களும் இந்த விசாரணையில் பங்குபற்றியிருந்தன.

இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content