ஐரோப்பா செய்தி

இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கும் மருத்தவர்கள் – சிக்கலில் சுகாதாரத்துறை!

இங்கிலாந்தில் உள்ள குடியிருப்பு மருத்துவர்கள் அரசாங்கத்தின் சமீபத்திய சலுகையை நிராகரித்துள்ள நிலையில் வரும் 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

83 சதவீத வாக்குப்பதிவில் 65 சதவீதமான  மருத்துவர்கள் தொழில்துறை நடவடிக்கைக்கு சாதகமாக வாக்களித்துள்ளதாக  மருத்துவ சங்கம் (BMA) உறுதிப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் சூப்பர் புளூ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற இந்த காலக்கட்டத்தில் மருத்துவர்களின் வெலைநிறுத்தமானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என NHS அறக்கட்டளை எச்சரித்துள்ளது.

வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் முயற்சியில் சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் (Wes Streeting) சிறப்பு வாய்ப்புக்களை வழங்கியிருந்தாலும் மருத்துவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார செயலாளர், மருத்துவர்களின் நடவடிக்கையை பொறுப்பற்றது என விவரித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி