ஐரோப்பா

பிரித்தானியாவில் பட்டப்பகலில் கொள்ளையடித்த நபர்கள்

பிரித்தானிய நகரமொன்றில், பட்டப்பகலில் கொள்ளையர்கள் சிலர் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள Leeds நகரில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில், சற்றும் பயமில்லாமல் சில முகமூடிக் கொள்ளையர்கள் நகைக்கடை ஒன்றை கொள்ளையடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இரவில் யாருக்கும் தெரியாமல் திருடியதெல்லாம் போய், இப்போது பட்டப்பகலிலேயே திருடத் துவங்கியுள்ளார்கள் திருடர்கள். அதுவும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள தெரு ஒன்றில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூடி நிற்க, கார் ஒன்றில் வந்த கொள்ளையர்கள், ஆயுதங்களைக் கொண்டு நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து, நகைகளை அள்ளி பைகளில் போட்டுக்கொண்டு நிதானமாக தாங்கள் வந்த கார்களில் ஏறிச் செல்வதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்கிறார்கள்.

இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக West Yorkshire பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்