சரத்குமாரின் அடுத்த அவதாரம்! 150வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு
நடிகர் சரத்குமார் 80 மற்றும் 90 களில் வெற்றிகரமான ஹீரோவாக இருந்தவர். 2000-களில், அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் தோல்வியடைந்த பிறகு, கௌரவ தோற்றம், முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்த போர் தொழில் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தவிர சுமார் 15 படங்கள் அவர் கைவசம் உள்ளது.
இந்நிலையில் சரத்குமாரின் 150வது படமான தி ஸ்மைல் மேன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
ஷாம் மற்றும் பிரவின் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளார்கள்.
இனியா, சிஜா ரோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 17 times, 1 visits today)