இலங்கை செய்தி

யாழில் பரபரப்பு – கஜேந்திரகுமார் எம்.பி மீது தாக்குதல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

சிவில் உடையில் இரண்டு புலனாய்வு அதிகாரிகள் வருகையுடன் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அங்கு, நாடாளுமன்ற உறுப்பினருக்கும், சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில், அண்மித்த பாடசாலையில் க.பொ.த சாதாரண தர் பரீட்சை நிலையம் ஒன்று இருந்த நிலையில், அதனைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் காரசாரமான உரையாடல் இடம்பெற்றது.

எவ்வாறாயினும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி நாடாளுமன்ற உறுப்பினர் பொதுக்கூட்டத்தில் பங்குபற்றியதால் புலனாய்வு அதிகாரிகள் விளையாட்டு மைதானத்திற்கு சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை