விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் ஒய்வு அறிவிப்பு!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற டி20 தொடரில், 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், வங்காளதேச அணி வீரர் மஹ்மதுல்லா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வங்காளதேச அணி வீரர் மஹ்மதுல்லா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார்.

வங்காளதேச கிரிக்கெட் அணிக்காக இதுவரை 140 போட்டிகளில் விளையாடியுள்ள மஹ்மதுல்லா, பேட்டிங்கில் 2,394 ரன்களையும், பந்துவீச்சில் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ